இந்தியாவின் முன்னணி வர்த்தக குழுமமாக டாடா உள்ளது. இதன் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவுக்கு, ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ விருது வழங்கப்பட்டு கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது. ரத்தன் டாடாவின் தொழில் சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வர்த்தக உறவை மேம்படுத்தியதில், ரத்தன் டாடாவின் பங்களிப்பை கௌரவித்து, இந்த விருது வழங்கப்படுவதாக ஆஸ்திரேலியா அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய ஆணையர் பாரி ஓஃபாரெல், ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “ரத்தன் டாடாவின் தொழில் மற்றும் தொண்டு பணிகள் ஆஸ்திரேலியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. இந்தியா - ஆஸ்திரேலியா வர்த்தகத்தில், டாடாவின் நீண்ட கால பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் விருது வழங்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.