மத்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025 ஆம் நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சியை 7.2% எனக் கணித்துள்ளது. அதே சமயம், பணவீக்கம் 4.5% ஆக மிதமாக்கப்படும் என்று எதிர்பார்க்கிறது. பணவியல் கொள்கைக் குழு (MPC) கூட்டத்தின் போது, RBI கவர்னர் சக்திகாந்த தாஸ், FY25 ன் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.7% ஆக இருந்தது. இது தனியார் நுகர்வு மற்றும் முதலீட்டின் அதிகரிப்பு மூலம் உறுதியாக்கப்பட்டுள்ளது. இதனால் 2012-13 இற்குப் பிறகு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) அதன் அதிகபட்ச பங்கு எட்டப்பட்டுள்ளது.” என்று கூறினார். மேலும், “2025 ன் 2 ஆம் காலாண்டில் 7%, 3 மற்றும் 4 ஆம் காலாண்டுகளில் 7.4% வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. FY26 ன் முதலாம் காலாண்டு வளர்ச்சி 7.3% ஆக கணிக்கப்படுகிறது.” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மூன்றாம் காலாண்டில் பணவீக்கம் 4.8% ஆக உயரும். ஆனால், நான்காம் காலாண்டில் வலுவான காரிப் அறுவடை காரணமாக மேலும் மிதமான நிலை எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய உற்பத்திக்கு வானிலை தொடர்பான அபாயங்கள் கவலை அளிக்கின்றன. ஆனால், வலுவான காரீஃப் விதைப்பு மற்றும் போதுமான சேமிப்பு, உணவு பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.” என்று கூறினார்.