இந்தியாவைச் சேர்ந்த நிதி நிறுவனங்கள், 20000 ரூபாய்க்கு மேலான கடன் தொகையை ரொக்கமாக வழங்குவதற்கு, மத்திய ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.
வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளில் மத்திய ரிசர்வ் வங்கி முக்கிய கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன்படி, வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு 20000 ரூபாய்க்கு மேலான கடன் தொகையை ரொக்கமாக வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. அவை, வங்கிக் கணக்கு மூலம் பரிமாற்றம் செய்யப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த மே 8ம் தேதி இது தொடர்பான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு நிதி நிறுவனங்கள், வெளிப்படைத் தன்மை இல்லாமல் வணிகக் கடன், வீட்டுக் கடன், நகைக் கடன் உள்ளிட்டவற்றை வழங்குவதாக புகார் எழுந்ததை அடுத்து, மத்திய ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.














