கிழக்கு காங்கோவில் புகாவுக்கு அருகே இன்னொரு நகரத்தையும் கைப்பற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேற்கு ஆப்பிரிக்காவின் காங்கோ ஜனநாயக குடியரசில் எம்-23 கிளர்ச்சியாளர்கள் நீண்ட காலமாக போரில் ஈடுபட்டு வருகின்றனர். ருவாண்டா அவர்களுக்கு ஆதரவாக சுமார் 4,000 வீரர்களை அனுப்பி, கோமா நகரத்தை கைப்பற்ற உதவியுள்ளது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை 2,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
கடந்த 3ம் தேதி, எம்-23 கிளர்ச்சியாளர்கள் மனிதாபிமான காரணங்களுக்காக போர் நிறுத்தத்தை அறிவித்தனர். அதற்குள் கிழக்கு காங்கோவில் புகாவுக்கு அருகே இன்னொரு நகரத்தையும் அவர்கள் கைப்பற்றியதாக அறிவித்துள்ளனர். இதனால், உள்நாட்டு போரின் தீவிரம் மேலும் அதிகரித்துள்ளது.