கடந்த 24 ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 26 ஆயிரம் பத்திரப்பதிவுகள் நடைபெற்றுள்ளன.
ஆண்டுதோறும் தைப்பொங்கலுக்கு அடுத்த நாள் அதிகளவில் பத்திரப்பதிவுகள் நடைபெறும். அதனை தொடர்ந்து 31ம் தேதி வரை அதிக அளவில் டோக்கன்களை வழங்குவதற்காக சார்பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி போதிய அளவில் தினசரி கூடுதல் டோக்கன் வழங்கப்பட்டு பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த 22ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 21,004 பத்திர பதிவுகள் நடைபெற்று ரூபாய் 128.83 கோடி வருமானம் ஈட்டப்பட்டது. மேலும் இந்நிலையில் கடந்த 24 ஆம் தேதி பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக 26 ஆயிரம் பத்திரப்பதிவுகள் ஒரே நாளில் நடைபெற்றுள்ளது. மேலும் அதன் மூலம் ரூபாய் 214 கோடி வருவாய் ஈட்டப்பட்டு சாதனை படைத்துள்ளது. இனி வரும் நாட்களிலும் தொடர்ந்து பத்திர பதிவு அதிகரிக்கும் என பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.