'டைட்டன்' நீர்மூழ்கியின் சிதைவுகளுடன் மனித உடல் பாகங்கள் மீட்பு

June 30, 2023

மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண ‘டைட்டன்’ நீர்மூழ்கியில் சென்ற 5 பேர் வெடித்து பலியானதாக தகவல் வெளியானது. தற்போது அந்த நீர்மூழ்கியின் சிதைவுகளுடன் மனித உடல் பாகங்கள் என சில பகுதிகளும் மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலை பார்வையிட ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனத்தின் 'டைட்டன்' நீர்மூழ்கியில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர். 4 நாட்களுக்கு பின் டைட்டானிக் கப்பல் அருகே நீர்மூழ்கி வெடித்து சிதறி 5 பேரும் பலியாகி விட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். இந்த […]

மூழ்கிய டைட்டானிக் கப்பலை காண ‘டைட்டன்’ நீர்மூழ்கியில் சென்ற 5 பேர் வெடித்து பலியானதாக தகவல் வெளியானது.

தற்போது அந்த நீர்மூழ்கியின் சிதைவுகளுடன் மனித உடல் பாகங்கள் என சில பகுதிகளும் மீட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. டைட்டானிக் கப்பலை பார்வையிட ஓஷன்கேட் எக்ஸ்பெடிஷன்ஸ் நிறுவனத்தின் 'டைட்டன்' நீர்மூழ்கியில் 5 பேர் பயணம் மேற்கொண்டனர். 4 நாட்களுக்கு பின் டைட்டானிக் கப்பல் அருகே நீர்மூழ்கி வெடித்து சிதறி 5 பேரும் பலியாகி விட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர்.

இந்த விபத்து தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்கா மற்றும் கனடா அரசு அமைப்புகள் ஈடுபட்டுள்ளன. அமெரிக்க கடலோர காவல்படை, நீர்மூழ்கியின் சிதைந்த பகுதிகளை மீட்கும் பணியில் இறங்கியது. இந்நிலையில் நீர்மூழ்கியின் உடைந்த பாகங்களுடன், மனித உடல் பாகங்கள் போன்ற பொருட்களும் மீட்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு இருப்பதாக கடலோர காவல்படை கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu