ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டரான பெலிக்ஸ் ஜெரால்டை காவல்துறை அதிகாரிகளை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் காவல் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்த அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போது ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தான் ஏற்கனவே கைது செய்யப்படலாம் என முன் ஜாமின் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அம்மனு விசாரணைக்கு வந்த பொழுது நீதிபதி கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தார். மேலும் யூடியூப் சேனல்களை கட்டுப்படுத்துவதற்கான நேரம் இது என தெரிவித்துள்ளார்














