பிரபல சமூக ஊடக நிறுவனமான ரெட்டிட், தனது 5% ஊழியர்களை நீக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான நிறுவனத்தின் மறுசீரமைப்பு நடவடிக்கையின் பகுதியாக, இந்த பணி நீக்கம் சொல்லப்பட்டுள்ளது. ரெட்டிட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஸ்டீவ் ஹஃப்மேன், ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் செய்தியில் இந்த தகவல் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையில், நிறுவனத்தில் 2000 பேர் பணி செய்து வருகின்றனர். இந்நிலையில், பணி நீக்கம் காரணமாக 90 பேர் நீக்கப்பட உள்ளனர். மேலும், பணி அமர்வுகளை குறைக்கவும் ரெட்டிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 300 பேர் பணியமர்த்தப்பட இருந்த நிலையில், பணி அமர்வுகளின் எண்ணிக்கை 100 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களை சார்ந்த லட்சக்கணக்கான மக்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் ரெட்டிட் நிறுவனமும் இணைந்துள்ளது.