கடந்த 2019 ஆண்டு ரூ.525 கோடி மதிப்பீட்டில் புதிய தொழில்நுட்பத்துடன் பாம்பன் ரெயில் பாலம் கட்டுமான பணிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினர். இதன் பின்னர் பணிகள் தொடங்கியது.தற்போது மண்டபத்தில் இருந்து மையப்பகுதி வரையில் பணிகள் நிறைவடைந்துள்ளது.
மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது இந்த புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தை மேலும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்போது இந்த புதிய பாம்பன் ரெயில்வே பாலத்தைத் திறந்து வைக்க இருக்கிறார். அதன் எதிரொலியாக அனைத்து பணிகளையும் வேகமாக முடிக்க அதிகளவில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பாம்பன் புதிய ரெயில் பாலம் பணிகள் தீவிரமடைந்துள்ளன.














