புகழ்பெற்ற முதலீட்டாளர் ரேகா ஜுன்ஜுன்வாலா ஆதரவுடன் செயல்படும் கொல்கத்தாவின் பஜார் ஸ்டைல் ரீடெயில் நிறுவனம், இந்த வாரம் தனது ஆரம்ப பொதுப் பங்கு வெளியீடு (IPO) மூலம் மூலதன சந்தைக்குள் நுழைய உள்ளது.
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா மாநிலங்களில் முக்கிய சில்லறை விற்பனையாளராக இருக்கும் பஜார் ஸ்டைல் ரீடெயில், 153 கடைகளை கொண்டுள்ளது. 2023-ஆம் நிதியாண்டில் ரூ. 787.9 கோடி வருவாய் மற்றும் ரூ. 5.4 கோடி லாபம் ஈட்டியுள்ளது. இந்த நிலையில், IPO-வில் ரூ. 185 கோடி மதிப்புள்ள புதிய பங்குகள் வெளியிடப்படும். மேலும், தற்போதைய பங்குதாரர்கள் அதிகபட்சமாக 1.68 கோடி பங்குகளை சலுகை விலையில் விற்பனை செய்கின்றனர். அதில், ரேகா ஜுன்ஜுன்வாலா தனது 27.23 லட்சம் பங்குகளை விற்பனை செய்ய உள்ளார். புதிய பங்கு வெளியீட்டில் கிடைக்கும் ரூ. 135 கோடி தொகை, கடன் திரும்பச் செலுத்துதல் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும். அக்சிஸ் கேபிட்டல், இன்டென்சிவ் பிஸ்கல் சர்வீசஸ் மற்றும் ஜேஎம் ஃபைனான்சியல் ஆகியவை IPO-க்கான முதன்மை மேலாளர்களாக செயல்பட உள்ளன.














