வைகை அணையில் இருந்து பாசன நீர் திறப்பு

November 10, 2023

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து பாசனத்திற்கான நீர் திறக்கப்பட்டது. தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, ஆகிய மாவட்டங்களுக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணை நீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த முறை தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் வைகை அணையில் நீர்மட்டம் உயராமல் இருந்தது. இதனை அடுத்து முதல் மற்றும் இரண்டாம் போக பாசனத்திற்காக நீர் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் வைகை […]

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து பாசனத்திற்கான நீர் திறக்கப்பட்டது.
தேனி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, ஆகிய மாவட்டங்களுக்கு தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணை நீர் முக்கிய ஆதாரமாக உள்ளது. இந்த முறை தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் வைகை அணையில் நீர்மட்டம் உயராமல் இருந்தது. இதனை அடுத்து முதல் மற்றும் இரண்டாம் போக பாசனத்திற்காக நீர் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் அருகில் உள்ள கரையோர மக்களுக்கு முதல்,இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து 70 அடியை கடந்தது. இதனால் வைகை அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்க தமிழக அரசின் நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர்கள் உத்தரவிட்டதை தொடர்ந்து இன்று காலை முல்லைப் பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் கீழ் உள்ள இரு போக பாசன நிலங்களுக்கு பாசன நீர் திறக்கப்பட்டது. இது 45 நாட்களுக்கு 900 கன அடி வீதம், பின்னர் 75 நாட்களுக்கு முறை வைத்து மொத்தம் 120 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45041 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu