ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தை ஹிந்துஜா குழுமம் கையகப்படுத்துகிறது. இதற்கான ஒப்புதலை தேசிய நிறுவனங்கள் சட்ட நீதிமன்றம் அண்மையில் வழங்கி உள்ளது. இதனை பங்குச்சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ள ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனம், பங்குச் சந்தை பட்டியலில் இருந்து ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்குகள் விரைவில் நீக்கப்படும் என கூறியுள்ளது.
செபி மற்றும் என் சி எல் டி ஆகியவற்றின் உத்தரவின் படி, ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் பொது பங்குகள் பங்குச்சந்தை பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறது. மேலும், ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் மதிப்பு பூஜ்ஜியம் ஆக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. தேசிய மற்றும் மும்பை பங்குச் சந்தைகள், ரிலையன்ஸ் கேப்பிட்டல் பங்குகளை நீக்கும் நடவடிக்கைகளை தொடங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.