அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும தலைவராக பரூல் ஷர்மா நியமனம்

June 22, 2023

அனில் அம்பானியின் கீழ் இயங்கி வரும் ரிலையன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக பரூல் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 20ம் தேதி முதல் இவரது பதவிக்காலம் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது. “கடந்த 40 ஆண்டுகளாக, ரிலையன்ஸ் குழுமத்தின் பொது முகமாக டோனி ஜேசுதாசன் இருந்தார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்த நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் புதிய முகமாக பரூல் ஷர்மா நியமிக்கப்படுகிறார்” என்று அனில் அம்பானி கூறியுள்ளார். பரூல் ஷர்மா, ஸ்டார் இந்தியா நிறுவனத்தில் 15 […]

அனில் அம்பானியின் கீழ் இயங்கி வரும் ரிலையன்ஸ் குழுமத்தின் புதிய தலைவராக பரூல் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த ஜூன் 20ம் தேதி முதல் இவரது பதவிக்காலம் அமலுக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

“கடந்த 40 ஆண்டுகளாக, ரிலையன்ஸ் குழுமத்தின் பொது முகமாக டோனி ஜேசுதாசன் இருந்தார். அவர் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்த நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் புதிய முகமாக பரூல் ஷர்மா நியமிக்கப்படுகிறார்” என்று அனில் அம்பானி கூறியுள்ளார். பரூல் ஷர்மா, ஸ்டார் இந்தியா நிறுவனத்தில் 15 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் செயல்பாடுகளை நிர்வகித்தவர். அதற்கு முன்னதாக, பிரபல ஜெர்மன் ஒளிபரப்பு நிறுவனத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டுள்ளார். ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவர், “இது சவால் நிறைந்த பொறுப்பாகும். இயன்றவரை எனது பணியை சிறப்பாக செய்வேன்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu