சாதாரண காரை ஸ்மார்ட் காராக மாற்றும் ஜியோ மோடிவ் கருவியை ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
பழைய மாடல் கார்கள் மற்றும் வெறும் அடிப்படை வசதிகளை கொண்ட கார்களில், இணைய சேவை இருக்காது. இதனால், இவை ஸ்மார்ட் கார்களாக இயங்க முடியாது. அந்த வகையில், சாதாரண காரை கூட ஸ்மார்ட் காராக மாற்றும் கருவியை ரிலையன்ஸ் ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இது, கைபேசியில் உள்ள ஜியோ சிம் கார்டு மூலமாகவே இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இதற்கு, தனியாக சிம் கார்டு எதுவும் தேவை இல்லை. இந்த கருவியை காரில் இணைத்து விட்டால், காரின் இருப்பிடம், பார்க்கிங், மேப் போன்ற பல்வேறு வசதிகளை பெற முடியும். இதனை காரில் இணைப்பதற்கு நிபுணர்களின் சேவை தேவையில்லை. சாதாரணமாக, காரில் உள்ள பிளக்கில் இணைத்து பயன்படுத்த முடியும். இதன் விலை 11999 என சொல்லப்பட்டுள்ளது. ஆனால், ரிலையன்ஸ் டிஜிட்டல் வலைதளத்தில் 58% சலுகையுடன், 4999 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.