ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் வருடாந்திர அடிப்படையில் 13% உயர்ந்து, 4716 கோடியாக பதிவாகியுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 12% உயர்ந்து, 23394 கோடி ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் 20901 கோடியாகவும், லாபம் 12210 கோடியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவினங்கள் 17172 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன், சராசரியாக, ஒரு பயனர் மூலம் கிடைக்கும் வருவாய் 6.7% உயர்ந்து, 178.8 ரூபாயாக பதிவு செய்யப்பட்டுள்ளது. செலவினங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாலும், கட்டணங்களை உயர்த்தாமல் இருப்பதாலும், ஜியோ நிறுவனம் கடந்த 5 காலாண்டுகளாக குறைவான லாபம் மற்றும் வருவாயை பதிவு செய்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.