ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம், இந்தியாவில் நுகர்வு பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனம், குஜராத்தில், இண்டிபெண்டன்ஸ் என்ற பெயரில் புதிய எஃப் எம் சி ஜி பிராண்டை தொடங்கியுள்ளது. இந்த பிராண்ட் மூலம் இந்தியர்களுக்கான பேக்கேஜ்ட் உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஸ்டேப்ளர் பின் தொடங்கி பால் பொருட்கள் வரை, மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் இந்த பிராண்டில் விற்பனை செய்யப்படும். குஜராத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் இந்த பிராண்ட் விரைவில் விரிவாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிராண்டின் அறிமுகம் குறித்து ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குனர் இஷா அம்பானி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். சமையல் எண்ணெய், பருப்பு வகைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், பால் பொருட்கள் உள்ளிட்ட பல நுகர்வு பொருட்கள் இந்த பிராண்டின் கீழ் விற்பனையாகும் என தெரிவித்துள்ளார்.