சீனாவை சேர்ந்த பிரபல ஃபேஷன் நிறுவனம் ஷேன், 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அரசால், இந்திய வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. தற்போது, ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம், ஷேன் நிறுவனத்தை மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு வரும் விதமாக, நிறுவனத்துடன் கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஷேன் நிறுவனத்தின் தயாரிப்புகளை ரிலையன்ஸ் நிறுவனத்தின் விற்பனையாகங்களில் விற்கவும், அதன் செயலி மூலம் விற்கவும், ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் ட்ரெண்ட்ஸ் கடைகளில் ஷேன் தயாரிப்புகள் விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பேசிய ஷேன் நிறுவனத்தின் மூத்த அதிகாரி, "இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு ஷேன் தயாரிப்புகளை கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது" என்று கூறினார். மேலும், "தடையிலிருந்து ஷேன் நிறுவனம் மீண்டு வந்து வர்த்தகத்தில் ஈடுபட உள்ளது" என்று கூறியுள்ளார்.