ரிலையன்ஸ் ஜியோ மார்ட்டில் 1000 க்கும் மேற்பட்டோர் நீக்கம்

ரிலையன்ஸ் குழுமத்தின் இணைய வர்த்தகத் தளமாக ஜியோ மார்ட் உள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தை அண்மையில் கையகப்படுத்தியது. இந்த நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ நிறுவனத்தின் 3500 பேர் ரிலையன்ஸ் உடன் இணைகின்றனர். இதன் காரணமாக, 1000க்கும் மேற்பட்ட ஜியோ மார்ட் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. நிறுவனத்தில், செலவுகளைக் குறைக்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மொத்தவிலை விற்பனை பிரிவில் இருந்து, […]

ரிலையன்ஸ் குழுமத்தின் இணைய வர்த்தகத் தளமாக ஜியோ மார்ட் உள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம், மெட்ரோ கேஷ் அண்ட் கேரி நிறுவனத்தை அண்மையில் கையகப்படுத்தியது. இந்த நிறுவனங்களின் இணைப்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ நிறுவனத்தின் 3500 பேர் ரிலையன்ஸ் உடன் இணைகின்றனர். இதன் காரணமாக, 1000க்கும் மேற்பட்ட ஜியோ மார்ட் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

நிறுவனத்தில், செலவுகளைக் குறைக்கும் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மொத்தவிலை விற்பனை பிரிவில் இருந்து, கிட்டத்தட்ட 15,000 பேரை நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பகுதியாக, தற்போதைய ஊழியர் நீக்கம் அமைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. தொடர்ந்து, அடுத்த சுற்று பணி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu