10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது.
அரசு மற்றும் அரசு சாரா சேவை மற்றும் பலன்களை பெற மக்கள் ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் இதனை மேற்கொள்ள ரூ.25 மற்றும் ஆதார் பதிவு மையத்தின் மூலம் இந்த பணிக்கு ரூ.50-ம் கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் விலாசம் மட்டுமே அப்டேட் செய்ய முடியும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும் பெயர், பிறந்த தேதி, பாலினம், விலாசம், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி, பயோமெட்ரிக் என அனைத்து விவரங்களையும் புதுப்பிக்க ஆதார் பதிவு மையத்தை அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அருகாமையில் உள்ள ஆதார் பதிவு மையத்தை uidai.gov.in தளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.














