ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் லாபம் 17.19% சரிவு

November 14, 2022

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 17.19% சரிவை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தின் லாபம் 71.15 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவே கடந்த வருட ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 85.92 கோடி ரூபாய் லாபம் பதிவாகி இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர வருவாய் 317.58 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 334.5 கோடி வருவாய் பதிவாகியிருந்தது. எனவே, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 5.06% […]

நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 17.19% சரிவை சந்தித்துள்ளது. இந்த நிறுவனத்தின் லாபம் 71.15 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இதுவே கடந்த வருட ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில், 85.92 கோடி ரூபாய் லாபம் பதிவாகி இருந்தது. இந்த நிறுவனத்தின் நிகர வருவாய் 317.58 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில், 334.5 கோடி வருவாய் பதிவாகியிருந்தது. எனவே, முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 5.06% சரிவாகும்.

அண்மையில் இந்த நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில், இந்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் கூடுதல் நிர்வாகிகளாக ஆர். வைத்தியநாதன் மற்றும் உஷா ரவி ஆகியோர் 4 ஆண்டு காலத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 11, 2022 முதல் நவம்பர் 10, 2026 வரை அவர்கள் குழுவில் இருப்பதற்கு நிர்வாகக் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu