உடலில் உள்ள கெட்ட கொழுப்பை 30% குறைக்கும் தடுப்பூசி கண்டுபிடிப்பு

December 29, 2023

மனித உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை 30% அளவில் குறைப்பதற்கு, புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனித உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளுக்கு, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் காரணமாக உள்ளன. குறிப்பாக, இதய நோய் வருவதற்கு முக்கிய காரணமாக கெட்ட கொழுப்பு உள்ளது. உலக அளவில் இதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், கெட்ட கொழுப்புகளை 30% அளவில் குறைக்கும் தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, மருத்துவ துறையில் முக்கிய புரட்சியை ஏற்படுத்தும் என […]

மனித உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை 30% அளவில் குறைப்பதற்கு, புதிய தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மனித உடலில் ஏற்படும் பல்வேறு உபாதைகளுக்கு, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் காரணமாக உள்ளன. குறிப்பாக, இதய நோய் வருவதற்கு முக்கிய காரணமாக கெட்ட கொழுப்பு உள்ளது. உலக அளவில் இதய நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், கெட்ட கொழுப்புகளை 30% அளவில் குறைக்கும் தடுப்பூசியை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது, மருத்துவ துறையில் முக்கிய புரட்சியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. NPJ Vaccines என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வு அறிக்கையில் இந்த தடுப்பூசி தொடர்பான விவரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், இந்த தடுப்பூசி தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருவதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu