மேகாலயா குகையில் புதிய தவளை இனம் கண்டுபிடிப்பு

மேகாலயாவில் உள்ள காரா மலைப் பகுதியின் தெற்கு பக்கத்தில், புதிய தவளை இனம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜூவாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சிஜூ குகை பகுதியில் புதிய தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர். முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள குகை ஒன்றில் புதிய தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, இரண்டாவது முறையாக, மேகாலயாவில் புதிய தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா பொது முடக்கம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, கடந்த […]

மேகாலயாவில் உள்ள காரா மலைப் பகுதியின் தெற்கு பக்கத்தில், புதிய தவளை இனம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஜூவாலஜிக்கல் சர்வே ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சிஜூ குகை பகுதியில் புதிய தவளை இனத்தை கண்டுபிடித்துள்ளனர். முன்னதாக, கடந்த 2014 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் உள்ள குகை ஒன்றில் புதிய தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது, இரண்டாவது முறையாக, மேகாலயாவில் புதிய தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பொது முடக்கம் தொடங்குவதற்கு சற்று முன்னதாக, கடந்த ஜனவரி 2020ல் இந்த தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சுமார் 4 கிலோமீட்டர் நீளமான சுண்ணாம்பு பாறை குகைகளில், 60 முதல் 100 மீட்டர் ஆழத்தில் இந்த தவளை இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த இனத்திற்கு குகையின் பெயரிலேயே Amolops siju என்று பெயரிடப்பட்டுள்ளது. அண்மையில் வெளியான சர்வதேச ஆய்வு இதழில், இது குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்வேறு கட்ட ஆய்வுகளுக்கு பின்னர், இந்த தவளை இனம் புதியது என்பதை விஞ்ஞானிகள் நிரூபித்துள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu