உச்சநீதிமன்றத்தில் முதல் முறையாக இடஒதுக்கீடு நடைமுறை – தலைமை நீதிபதியின் முடிவு!

பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் புதிய நடைமுறை அமலாக்கம். 52-ஆவது தலைமை நீதிபதியாக மே மாதத்தில் பதவியேற்ற பூஷன் ராமகிருஷ்ண கவாய், அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இப்போது, உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக, பணியாளர் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். பதிவாளர், நூலக மேலாளர், சீனியர் உதவியாளர் போன்ற பணியிடங்களில், பட்டியலின பிரிவினருக்கு 15% மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது சமூக […]

பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்கும் புதிய நடைமுறை அமலாக்கம்.

52-ஆவது தலைமை நீதிபதியாக மே மாதத்தில் பதவியேற்ற பூஷன் ராமகிருஷ்ண கவாய், அரசியலமைப்பின் முக்கியத்துவத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இப்போது, உச்சநீதிமன்ற வரலாற்றில் முதல் முறையாக, பணியாளர் நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இடஒதுக்கீட்டு திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். பதிவாளர், நூலக மேலாளர், சீனியர் உதவியாளர் போன்ற பணியிடங்களில், பட்டியலின பிரிவினருக்கு 15% மற்றும் பழங்குடியினர் பிரிவினருக்கு 7.5% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இது சமூக நீதிக்கான முன்னேற்றமான, வரவேற்கத்தக்க மாற்றமாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu