திருப்பதியில் பிரம்மோற்சவம் அன்று வாகனங்களுக்கு கட்டுப்பாடு - தேவஸ்தானம் அறிவிப்பு

September 23, 2022

திருப்பதியில் பிரம்மோற்சவம் அன்று வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி, பூதேவி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை காண்பதற்காக 4 மாட வீதிகளில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் கூடும். திருமலையில் 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே இட வசதி […]

திருப்பதியில் பிரம்மோற்சவம் அன்று வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதித்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் 27 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடைபெற உள்ளது. ஏழுமலையான் சமேத ஸ்ரீதேவி, பூதேவி 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இதனை காண்பதற்காக 4 மாட வீதிகளில் கட்டுக்கடங்காத அளவில் கூட்டம் கூடும்.

திருமலையில் 12 ஆயிரம் வாகனங்கள் நிறுத்துவதற்கு மட்டுமே இட வசதி உள்ளது. எனவே பிரம்மோற்சவ விழாவின் போது கார், வேன் உள்ளிட்ட 12 ஆயிரம் வாகனங்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்பட உள்ளது. கூடுதலாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் வாகனங்கள் திருப்பதியில் நிறுத்தி விட்டு திருமலைக்குச் செல்லும் அரசு பேருந்துகளில் சென்று தரிசனம் செய்ய வேண்டும் என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதே போல் கருட சேவைக்கு முந்தைய நாளான 30 ஆம் தேதி மதியம் 2 மணி முதல் 2 ஆம் தேதி இரவு வரை திருமலைக்கு இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை. இருந்து இருசக்கர வாகனத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் இருசக்கர வாகனத்தை திருப்பதியில் நிறுத்தி விட்டு அரசு பேருந்தில் சென்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டுமென தெரிவிக்கப்பட்டு உள்ளது.

1
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu