இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் மெதுவாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. சில மாநிலங்கள் புதுமையாக பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 6800ஐ கடந்துள்ளது. இதில் கேரளா மாநிலத்தில் மட்டும் 2000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குஜராத்தில் 1000ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று மட்டும் 25 புதிய தொற்றுகள் பதிவாகி, சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 219 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்; அவர்கள் கேரளா, டெல்லி, மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதே நேரத்தில் 18 பேர் குணமடைந்ததும் ஆறுதல் அளிக்கிறது.