கடந்த ஜனவரி மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 5.1% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 3 மாதங்களில் பதிவாகும் குறைந்தபட்ச சில்லறை பணவீக்கம் ஆகும்.
நுகர்வோர் விலை குறியீட்டு எண் - CPI அடிப்படையிலான பணவீக்கம் கடந்த டிசம்பர் மாதத்தில் 5.69% ஆகவும், ஜனவரி மாதத்தில் 6.52% ஆகவும் சொல்லப்பட்டுள்ளது. மேலும், உணவு துறை சார்ந்த பணவீக்கம் 9.53% அளவில் இருந்து 8.3% குறைந்துள்ளது என தேசிய புள்ளியியல் ஆய்வகப் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, பல்வேறு உணவுப் பொருட்களின் விலைகள் ஜனவரி மாதத்தில் குறைந்துள்ளன.