தீபா கர்மாகர், ஜிம்னாஸ்டிக்ஸில் தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் தகுதி பெற்ற முதல் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர், தனது ஓய்வை அறிவித்துள்ளார். இது குறித்து அவர், "ஜிம்னாஸ்டிக்ஸ் எனது வாழ்க்கையின் முக்கிய அங்கமாக இருந்தது, ஆனால் தற்போது ஓய்வு எடுக்க நேரம் வந்தது" என தெரிவித்தார். மேலும் தீபா, மற்ற பெண்களுக்கு ஆதரவான வழிகாட்டிகள் மற்றும் பயிற்சியாளர்கள் தேவை எனவும் கூறி உள்ளார். மேலும் அவர் தனது பயணத்தில் பெற்ற ஆதர்வுக்கு அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். அவரது கடைசி வெற்றி, ஆசிய ஜிம்னாஸ்டிக்ஸ் சாம்பியன்ஷிப் என்பது குறிப்பிடத்தக்கது.