இஸ்ரோ, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையிலான ராக்கெட்டை வடிவமைத்து வருகிறது. இந்த ராக்கெட் செயல்பாட்டுக்கான முக்கிய பரிசோதனை சனிக்கிழமை நடக்க உள்ளதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். சாதகமான வானிலை அமையும் பட்சத்தில் இந்த சோதனை சனிக்கிழமை நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
"முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு, மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட் வடிவமைப்பில், இஸ்ரோவின் முதல் முயற்சி வெற்றி பெற்றது. அப்போது, அந்த ராக்கெட் கடலில் தரை இறங்கும் படி வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது, ஹெலிகாப்டர் மூலம் சுமார் 3 முதல் 5 கிலோ மீட்டர் உயரம் வரை எடுத்துச் செல்லப்பட்டு, 4 முதல் 5 கிலோ மீட்டர் நேர் பாதையில் வெளியேற்றப்பட உள்ளது. அதன் பின்னர், அந்த ராக்கெட் குறிப்பிட்ட இலக்கை நோக்கி பயணித்து, சரியாக ரன் வேயில் தரை இறங்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் உள்ள சித்ரதுர்கா பகுதியில் இந்த சோதனை நடத்தப்பட உள்ளது" என்று அவர் கூறினார்.