தமிழகத்தில் ஓமலூர் மற்றும் பாளையம் சுங்கச்சாவடிகளில் ரூபாய் 133.36 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியிருப்பதாக சி ஏ ஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சுமார் 46 சுங்கச்சாவடிகள் மூலம் நாள் ஒன்றுக்கு 17 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளிலும் பாஸ்ட் ட்ராக் முறை அமல்படுத்தி நடைமுறையில் உள்ளது. இதில் கிருஷ்ணகிரி-தோப்பூர் வரை 62 கிலோமீட்டர் சாலை, கிருஷ்ணகிரி- தும்பிபாடி வரை 86 கிலோமீட்டர் சாலை, பாளையம் சுங்கச்சாவடிக்கு ஆண்டுக்கு சரியாக ரூபாய் 715.86 கோடி கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே போல் தும்பிபாடி - நாமக்கல் வரை (68.62 கிலோமீட்டர்) ஓமலூர் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கிறது.
இதில் கடந்த ஜூன் மாதம் 2010 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூபாய் 133.36 கோடி ரூபாய் வருவாய் இழப்பு இந்த இரண்டு சுங்கச்சாவடிகளிலும் ஏற்பட்டுள்ளதாக சி ஏ ஜி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில் பாளையம் சுங்கச்சாவடி 73.88 கோடியும், ஓமலூர் சுங்கச்சாவடி 54.48 கோடியும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கு சாலைகள் அமைக்க இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் முன்னணி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் தும்பிப்பாடி - சேலம் பகுதி சேர்க்கப்பட்டு சேலம் புறவழிச்சாலை அதிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தொப்பூர்- தொப்பூர் கேட் வரை 7.4 கி.மீ விதி சேர்க்கப்படவில்லை. இவ்வாறு பல வகைகளில் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.