பொருளாதார நிபுணர் கிரித் பரிக் ஆலோசனைகளை ஏற்று, மத்திய அமைச்சரவை, சிஎன்ஜி மற்றும் பிஎன்ஜி விலைகளை குறைக்க திட்டமிட்டுள்ளது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் எரிவாயுவிற்கான புதிய விலைகளை இன்று அமைச்சரவை வெளியிட்டுள்ளது.
அமைச்சரவை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்தியாவின் 10% மாதாந்திர சராசரி கச்சா எண்ணெய் இறக்குமதி விலை ஒரு யூனிட்டுக்கு 4 டாலர்கள் முதல் 6.5 டாலர்கள் ஆக இருக்கும். எனவே, வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் எரிவாயு மற்றும் வாகனங்களுக்கான சிஎன்ஜி ஆகியவற்றின் விலைகளில் 11% வரை சரிவு காணப்படலாம். இந்த தகவல்களை குறித்து பேசிய ஒன்றிய அமைச்சர் அனுராக் தாகூர், “பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட நாளான இன்று இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இது பொது மக்களுக்கு வரப்பிரசாதமாக அமையும்” என்று கூறியுள்ளார்.
புதிய விலைகளின் படி, உதாரணத்திற்கு, 92 ரூபாயாக இருக்கும் ஒரு கிலோ சிஎன்ஜி, இனிமேல் 87 ரூபாயாக குறைக்கப்படும். அதேபோன்று, சமையல் எரிவாயு 57 ரூபாயிலிருந்து 52 ரூபாய் ஆக குறையும். இந்தியாவில் ஒவ்வொரு நகரங்களிலும் உள்ள விலைகளுக்கு ஏற்ப, சலுகை விலைகள் நிர்ணயிக்கப்படும்.