ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டு அறிக்கையை இன்று வெளியிடுகிறது. முதற்கட்டமாக, ரிலையன்ஸ் ஜியோவின் நிதிநிலை அறிக்கை வெளிவந்துள்ளது. அதன்படி, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் 12% உயர்வடைந்துள்ளது.
கடந்த ஜூன் மாத இறுதியில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் நிகர லாபம் 12.2% உயர்ந்து, 4863 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் இயக்க வருவாய் 9.9% உயர்ந்து, 23042 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொத்த செலவினங்கள் 17594 கோடியாக உயர்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் எபிட்டா மதிப்பு 12278 கோடியாக சொல்லப்பட்டுள்ளது.














