2024 ஐபிஎல் சீசனில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஆக ரிஷப் பண்ட் செயல்படுவார் என டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்து மீட்கப்பட்டார். பின்னர் 14 மாதங்களுக்குப் பின் கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளார். அதன் பின்னர் இந்திய கிரிக்கெட் போர்ட்டின் தேசிய அகடாமியில் உடல்திறன் சார்ந்த பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வாரம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக செயல்பட தகுதி பெற்றுவிட்டதாக பி.சி.சி.ஐ தெரிவித்தது. அதனை அடுத்து 2024 ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் விளையாட உள்ளது உறுதியானது. இந்நிலையில் இந்த அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படுவார் என அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. காயம் காரணமாக 2023 சீசன் முழுவதும் ரிஷப் பண்ட் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.