டெல்லியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
டெல்லி நகரின் தண்ணீர் தேவையை யமுனை நதி 40 சதவீதம் தீர்த்து வைக்கிறது. டெல்லிக்கு அருகே உள்ள அரியானா மாநிலத்தில் இருந்து யமுனை நதி தண்ணீரை சுத்திகரித்து டெல்லிக்கு கொண்டு வருகிறார்கள். மீதமுள்ள தண்ணீரை கங்கையில் இருந்து எடுக்கிறார்கள். டெல்லி நகருக்கு ஒரு நாளைக்கு 125 கோடி கேலன் தண்ணீர் தேவைப்படுகிறது. இதில் 95 கோடி கேலன் தண்ணீரை டெல்லி குடிநீர்வாரியம் ஏற்பாடு செய்து கொடுக்கிறது.
வழக்கமாக கோடைகாலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவது இயல்பு. ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் அது அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. . மழை குறைந்ததால் யமுனையில் தண்ணீர் அளவு குறைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.