கோவையில் மாபெரும் கடனுதவி வழங்கல் நிகழ்வு - நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

October 4, 2023

கோவையில், நேற்று மாபெரும் கடன் உதவி வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார். கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை ஒருங்கிணைந்து, கடன் உதவி வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தன. கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நேற்று ஒரே நாளில், 3749 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்ட […]

கோவையில், நேற்று மாபெரும் கடன் உதவி வழங்கல் நிகழ்வு நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றினார்.
கனரா வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை ஒருங்கிணைந்து, கடன் உதவி வழங்கும் விழாவை ஏற்பாடு செய்திருந்தன. கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. நேற்று ஒரே நாளில், 3749 கோடி மதிப்பில் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. நிகழ்வில் பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “கடந்த இரண்டு மாதங்களாக மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளின் விளைவாக, கடன் உதவி வழங்கும் மாபெரும் நிகழ்வு நடைபெற்று உள்ளது. அனைவரும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிதி உதவி திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu