சுயஉதவி குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி கடன் வழங்க பாரத ஸ்டேட் வங்கியுடன் தமிழக அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு அரசின் 2023-24-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக சென்னை, நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாக கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி இடையே நேற்று முன்தினம் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ச. திவ்யதர்சினியும், சென்னை வட்ட பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் நிராஜ் பாண்டாவும் கையெழுத்திட்டனர்.