பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட், குழந்தைகளின் ஆடை விற்பனை பிராண்ட் Ed-a-Mamma நிறுவனத்தை துவங்கி நடத்தி வந்தார். இந்நிலையில், இந்த நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும், ரிலையன்ஸ் நிறுவனம் முழுமையாக கையகப்படுத்த உள்ளது. சுமார் 300 முதல் 350 கோடி அளவில் இந்த வர்த்தக பரிமாற்றம் நிகழும் என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதாகவும், அடுத்த 10 நாட்களுக்குள் ஒப்பந்தம் கையெழுத்து ஆகலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம், குழந்தைகள் ஆடை விற்பனை துறையில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு கூடுதல் சந்தை கிடைக்கும் என நம்பப்படுகிறது. மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் குழந்தைகள் ஆடை விற்பனை துறை மதிப்பு 13,000 கோடியாக உயரும் என்று கருதப்படுகிறது. தற்போதைய நிலையில், லைப் ஸ்டைல், ஷாப்பர்ஸ் ஸ்டாப் போன்ற சில்லறை விற்பனையகங்களில், மிந்த்ரா, ஆஜியோ, ஃபர்ஸ்ட் க்ரை, அமேசான், டாடா கிளிக் போன்ற இணைய வர்த்தகத் தளங்களிலும் Ed-a-Mamma ஆடைகள் விற்கப்பட்டு வருகின்றன. இது ரிலையன்ஸ் குடும்பத்துடன் இணைவதால், விற்பனை பன்மடங்கு உயரும் என்று கருதப்படுகிறது.














