அமுல் நிறுவனத்தின் தலைமை அதிகாரியான ஆர் எஸ் சோதி, தனது பதவியிலிருந்து விலகி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. எனவே, இடைக்கால நிர்வாக அதிகாரியாக ஜெயன் மேத்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது பதவிக்காலம் முடிந்த பின்னரும், கடந்த 2 ஆண்டுகளாக ஆர் எஸ் சோதி, கூடுதலாக பொறுப்பேற்று வந்துள்ளார். இந்நிலையில், இந்தியாவின் பால் பொருட்கள் அசோசியேஷனின் தலைவராக உள்ள அவர், கூடுதல் பொறுப்புகளை சமாளிக்க, அமுல் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அத்துடன், நிர்வாகக் குழுவினர் தன்னை ராஜினாமா செய்ய சொல்லி வற்புறுத்தவில்லை என்றும், ஏற்கனவே, தான் 2 ஆண்டுகள் கூடுதல் பணி ஏற்று வந்துள்ளதால் பதவி விலகுவதாகவும் விளக்கமளித்துள்ளார். அவர் அமுல் நிறுவனத்தில் 40 ஆண்டுகளும், தலைமைப் பொறுப்பில் 10 ஆண்டுகளும் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.