வரலாற்றுச் சரிவில் இந்திய ரூபாயின் மதிப்பு - டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81 புள்ளிகளைக் கடந்துள்ளது

September 24, 2022

அமெரிக்க ஃபெடரேஷன் எடுத்துள்ள நடவடிக்கைகளால், கடந்த சில நாட்களாக, டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. நேற்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், 81.13 புள்ளிகளாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றுச் சரிவைப் பதிவு செய்தது. நேற்று மதியத்தில் 80. 856 புள்ளிகளாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு மாலையில் 80.998 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 300 புள்ளிகள் சரிந்து, […]

அமெரிக்க ஃபெடரேஷன் எடுத்துள்ள நடவடிக்கைகளால், கடந்த சில நாட்களாக, டாலரின் மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. நேற்றைய வர்த்தக நாளின் தொடக்கத்தில், 81.13 புள்ளிகளாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றுச் சரிவைப் பதிவு செய்தது. நேற்று மதியத்தில் 80. 856 புள்ளிகளாக இருந்த இந்திய ரூபாயின் மதிப்பு மாலையில் 80.998 ஆக உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 300 புள்ளிகள் சரிந்து, 17,300 ஆக வர்த்தகம் ஆனது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் குறியீட்டு எண் 1100 புள்ளிகள் சரிந்து, வர்த்தகம் ஆனது.

ஜியோஜித் பினான்சியல் சர்வீஸஸ் நிறுவனத்தின் ஆராய்ச்சி தலைவர் வினோத் நாயர் இதுகுறித்து கூறும் பொழுது, அடுத்த சில வாரங்களுக்கு கரடியின் ஆதிக்கமே நீடிக்கும் என்றார். அத்துடன், மத்திய வங்கியின் கட்டுப்பாடுகள் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்த நிலை போன்ற காரணங்களால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்தியா, பொருளாதார அடிப்படையில் நல்ல நிலைமையிலேயே உள்ளதாகவும், வரி வசூல், கிரெடிட் மதிப்பு போன்றவற்றில் சாதகமான சூழல் நிலவி வருவதாகவும் கூறினார். எனவே, இந்த சரிவு நிலைமை சில நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu