இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவு

February 3, 2025

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் இன்று (பிப். 3) 67 பைசா சரிந்து 87.29 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. வரலாறு காணாத அளவிற்கு ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. வங்கிகளுக்கிடையேயான அந்நிய செலாவணி வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு 87 ஆக தொடங்கி பின்னர் 87.29 ஆகக் குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோத குடியேற்றத்துக்கு தடையிட்டு, விசா கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறார். […]

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் இன்று (பிப். 3) 67 பைசா சரிந்து 87.29 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. வரலாறு காணாத அளவிற்கு ரூபாய் மதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால் இந்திய பொருளாதாரத்தின் நிலை கவலைக்கிடமாக மாறியுள்ளது. வங்கிகளுக்கிடையேயான அந்நிய செலாவணி வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு 87 ஆக தொடங்கி பின்னர் 87.29 ஆகக் குறைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, சட்டவிரோத குடியேற்றத்துக்கு தடையிட்டு, விசா கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறார். மேலும், கனடா, மெக்சிகோ, சீனா போன்ற நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. கனடா, மெக்சிகோ பொருட்களுக்கு 25% வரி, சீன பொருட்களுக்கு 10% கூடுதல் வரி விதிப்பு ஆகியவை அமலாகி உள்ளன. இந்த நடவடிக்கைகள் அமெரிக்க டாலரின் மதிப்பை உயர்த்தியுள்ள நிலையில், இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu