உக்ரேனிய நகரமான கெர்சனை ரஷ்யா கைவிட்டது

November 10, 2022

உக்ரேனிய நகரமான கெர்சனை விட்டு ரஷ்ய படைகள் பின்வாங்கியது. தற்போது ரஷ்ய படைகள் மீது உக்ரைனிய வீரர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் பலியாகி வருகின்றனர். சமீபத்தில்தான் டொனேட்ஸ்க் பகுதியில் இருந்து ரஷ்யா பின்வாங்கியது. அதனையடுத்து கெர்சன் பகுதியிலும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனிய வீரர்களின் தாக்குதலை சமாளிக்க ரஷ்ய வீரர்கள் திணறுகிறார்கள் என செய்தி வந்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு ஆக்கிரமிக்கப்பட்ட […]

உக்ரேனிய நகரமான கெர்சனை விட்டு ரஷ்ய படைகள் பின்வாங்கியது.

தற்போது ரஷ்ய படைகள் மீது உக்ரைனிய வீரர்கள் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான ரஷ்ய வீரர்கள் பலியாகி வருகின்றனர். சமீபத்தில்தான் டொனேட்ஸ்க் பகுதியில் இருந்து ரஷ்யா பின்வாங்கியது. அதனையடுத்து கெர்சன் பகுதியிலும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. உக்ரைனிய வீரர்களின் தாக்குதலை சமாளிக்க ரஷ்ய வீரர்கள் திணறுகிறார்கள் என செய்தி வந்துள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரேனிய நகரமான கெர்சனில் இருந்து படைகளை பின்வாங்க உத்தரவிட்டார். டினிப்ரோ ஆற்றின் எதிர்க் கரையில் தற்காப்புக் படைகளை நிறுத்தி வைத்துள்ளார். ரஷ்யாவின் இந்த நடவடிக்கையை உக்ரைன் எச்சரிக்கை உணர்வுடன் எதிர்கொள்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu