விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்த தடை விதிக்கும் ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என்று ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதனை ரஷ்யா தனது வீட்டு அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்துள்ளது.
விண்வெளியில் அணு ஆயுதங்களை நிறுத்தக்கூடாது என்பதை மீண்டும் உறுதி செய்ய ஒப்பந்த வரைவு தீர்மானம் ஒன்றை ஜப்பானும், அமெரிக்காவும் ஐநா பாதுகாப்புக்கு கவுன்சிலில் கூட்டாக கொண்டு வந்தன. என்றபோதிலும், ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அதை ரத்து செய்தது. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடு ரஷ்யா ஆகும். இது குறித்து ஐ.நாவுக்கான ரஷ்ய தூதர் வாசிலி நெப்போன்சியா கூறும்போது, விண்வெளியில் அணு ஆயுதங்கள் நிறுத்துவதை தடுப்பதற்கான ஒப்பந்தம் கடந்த 1967ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது இப்பொழுது கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் அபத்தமாக உள்ளது. அனைத்து வகை ஆயுதங்களையும் விண்வெளியில் நிறுத்துவதை தடை செய்வதற்கான அம்சம் அந்த தீர்மானத்தில் இடம்பெறவில்லை என்றார். இந்த தீர்மானத்தை ரத்து செய்ததன் மூலம் ஆயுத பரவலை தடுக்கும் முயற்சிக்கு சீனா தடை போட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.














