ரஷ்யா நாடு இன்று முதல் இந்தியர்களுக்கு இ விசா நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம், இந்தியாவைச் சேர்ந்த தனிநபர் ஒருவர், விருந்தினராகவோ, வர்த்தக முறையிலோ, சுற்றுலாவுக்காகவோ எளிமையாக ரஷ்யாவுக்குள் நுழைய முடியும். இதன் மூலம், சுற்றுலாத்துறை மற்றும் இரு தரப்பு உறவுகள் முன்னேற்றம் அடையும் என கருதப்படுகிறது.
ரஷ்யா அறிமுகம் செய்துள்ள ஒருமுறை பயன்படுத்தக்கூடிய விசா 4 நாட்களுக்கு மட்டுமே வழங்கப்படும். பயணிகள் 16 நாட்கள் வரை ரஷ்யாவில் தங்கிக் கொள்ளலாம். அத்துடன், 60 நாட்கள் செல்லுபடி ஆகும். மேலும், 40 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படும். இந்தியாவுடன் சேர்த்து, பஹ்ரைன், கம்போடியா, சீனா, இந்தோனேசியா, ஈரான், குவைத், மலேசியா, மியான்மர், சவுதி அரேபியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, துருக்கி, மெக்சிகோ, கொரியா ஆகிய 18 நாடுகளுக்கு ரஷ்யா இ விசா முறையை வழங்குவதாக ரஷ்யா அறிவித்திருந்தது. இந்தியாவுக்கு இன்று முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.














