அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்த பின்னரும் ரஷியா உக்ரைனில் தாக்குதலை அதிகரித்துள்ளது. தலைநகர் கீவ் மற்றும் சுற்றுப்புறங்களில் வன்முறை வெடித்தது.
கீவ் நகரில் நேற்று இரவு முழுவதும் ரஷியா 309 டிரோன்கள் மற்றும் 8 குரூஸ் ஏவுகணைகளால் கடும் தாக்குதல் நடத்தியது. இதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்; 155 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஆறு வயது சிறுவனும் அவனது தாயும் அடங்குவதாக மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்தார். காயமடைந்தோரில் 12 குழந்தைகளும் உள்ளனர். இதேசமயம் டொனெட்ஸ்க் பகுதியிலுள்ள சாசிவ்வ் நகரை கைப்பற்றியதாக ரஷியா அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 8க்குள் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் ரஷியாவுக்கு 100% வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.