கூகுள் நிறுவனத்துக்கு ரஷ்யாவில் 400 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவில் சர்ச்சைக்குரிய தகவல்களை நீக்கக்கோரி கூகுள் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. மாஸ்கோ நீதிமன்றம் வெளியிட்ட இந்த உத்தரவை கூகுள் நிறுவனம் செயல்படுத்த மறுத்தது. இந்த நிலையில், ரஷ்யாவின் சட்டதிட்டங்களுக்கு புறம்பான தகவல்களை பரப்பிய குற்றச்சாட்டுக்காக கூகுள் மீது இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தன் பாலின ஈர்ப்பு, பயங்கரவாதம் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் தகவல்களை நீக்க மறுத்ததாக கூகுள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்காக 407 கோடி ரூபாய் அதாவது 49 மில்லியன் டாலர்கள் அபராதம் விதித்து மாஸ்கோ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.