ஜப்பானின் ஓகோட்ஸ்க் கடற்பகுதியில் ரஷியாவின் டுபோலேவ்-95 போர் விமானங்கள் நீண்ட நேரமாக பறந்தது கண்டறியப்பட்டது.
இந்த குண்டுவீச்சு விமானங்கள் 8 மணி நேரத்துக்கும் அதிகமாக வானில் வட்டமிட்டன. ரஷியாவின் இந்த நடவடிக்கை மீது ஜப்பான் ராணுவம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது மட்டும் அல்லாது, கடந்த செப்டம்பர் மாதத்திலும் ரஷிய விமானங்கள் ஜப்பான் எல்லைக்குள் ஊடுருவி அச்சுறுத்தலை ஏற்படுத்திய சம்பவம் பதிவாகியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் ரஷியாவின் இத்தகைய நடவடிக்கைகள் இரு நாடுகளின் உறவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் பாதுகாப்பு தரப்பினர் இந்த செயல்களை தீவிரமாகக் கண்காணித்து வருவதாகவும், தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.