உக்ரைன் உணவகம் மீது ரஷிய ஏவுகணை நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 16 மாதங்களைக் கடந்து நீடித்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைனில் உள்ள கிராமடோர்ஸ்க் நகரில் உள்ள ஒரு உணவகம் மீது ரஷிய ராணுவம் 2 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் பலியானார்கள். 40-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் கட்டிட இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் உணவகம் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. இதில் 3 குழந்தைகளும், 14 வயதுடைய இரட்டை சகோதரிகளும் அடங்குவர்.














