சீனா ஓபன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சபலென்கா வெற்றி பெற்றார்.
சீனா ஓபன் டென்னிஸ் தொடரில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டத்தில், பெலாரசின் நம்பர் 1 வீராங்கனையுள்ள அரினா சபலென்கா, அமெரிக்காவின் மேடிசன் கீஸ் மோதினார். சபலென்கா 6-4, 6-3 என்ற செட் கணக்கில் எளிதாக வென்று, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டியில் செக் வீராங்கனை கரோலினா முச்சோவா, ஸ்பெயின் வீராங்கனை கிறிஸ்டினா பக்சா உடன் மோதினார். முச்சோவா 6-2, 6-0 என வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். நாளை மறுதினம், காலிறுதியில் சபலென்கா, முச்சோவா எதிர்கொள்ள உள்ளனர்.