ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த சாம் அல்ட்மேன், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளதாக சத்யா நாதெள்ளா அறிவித்துள்ளார்.
அண்மையில் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் அல்ட்மேன், பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நிறுவனத்தின் நிர்வாக குழு அவர் மீது நம்பிக்கை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக, மீரா மூர்த்தி புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், சாம் அல்ட்மேன், தங்கள் நிறுவனத்தில் இணைந்துள்ளதாக மைக்ரோசாப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து, கிரேக் ப்ரோக்மானும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஆராய்ச்சி குழுவில் பணியாற்ற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.