பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவின் முதல் டிரான்சிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது. நாடு தழுவிய முறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த டிரான்சிட் கார்டு மூலம், எளிமையான முறையில் பயணங்களை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிரான்சிட் கார்டை பயன்படுத்தி, மெட்ரோ ரயில்கள், பேருந்துகள், நீர்வழி போக்குவரத்து அமைப்புகள், பார்க்கிங் சிஸ்டம் போன்றவற்றில் எளிமையாக கட்டணம் செலுத்த முடியும். ஒற்றைக் கார்டை பயன்படுத்தி அனைத்துக்குமான கட்டணங்களை செலுத்த முடிவதால், பயணங்கள் எளிமையாக்கப்படுவதாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. பயணங்களுக்கு மட்டும் இன்றி, சில்லறை வணிகம் மற்றும் இணைய வர்த்தகத்திற்கும் டிரான்சிட் கார்டுகளை பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது. இது ரூபே மற்றும் நேஷனல் காமன் மொபிலிட்டி கார்ட் மூலம் இயக்கப்படுகிறது. இது இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வரும் என நம்புவதாக பாரத ஸ்டேட் வங்கி சேர்மன் தினேஷ்குமார் காரா தெரிவித்துள்ளார்.