இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி - எஸ்பிஐ, கடன் பத்திரங்களை வெளியிட திட்டமிட்டுள்ளது. கடன் பத்திரங்கள் வெளியீட்டின் மூலம், கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் நிதியை திரட்ட திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பங்குகளாக மாற்றிக் கொள்ளக்கூடிய, பேசல் 3 நிர்ணயங்களை நிறைவு செய்யும் நீண்ட கால கடன் பத்திரங்களை வெளியிட, பாரத ஸ்டேட் வங்கி திட்டமிட்டுள்ளது. வங்கியின் நிர்வாக குழு, இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது. நடப்பு 2024 ஆம் நிதி ஆண்டுக்குள் இந்த நிதி திரட்டப்படும் என்று மும்பை பங்குச் சந்தைக்கு சமர்ப்பித்த அறிக்கையில் எஸ் பி ஐ தெரிவித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து இந்த நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது.













